MSS 18 A : மதன நூல் MSS 18 B : நூல் 1 : மலையாள அனுபோக மந்திரம் நூல் 2 : தன்வந்திரி மகான் மலையாள மந்திரம் MSS 18 C : விஷக்கடி வைத்தியம் MSS 18 D : நூல் 1 : ஆதி முறை நூல் 2 : ஸ்நானம் செய்யும் வகை நூல் 3 : குழந்தை வைத்தியம் MSS 18 E : நூல் 1 : கைமுறை அனுபோகம் நூல் 2 : குழந்தை வைத்தியம் MSS 18 F : நூல் 1 : நிறைய வைத்தியர்களின் வைத்திய அனுபவம் நூல் 2 : மதன காம நூல் நூல் 3 : தலைப்பு இல்லை (வைத்தியம்) MSS 18 G : நூல் 1 : மூலர் முறை நூல் 2 : தலைப்பு இல்லை (மந்திரம்) நூல் 3 : தலைப்பு இல்லை (வைத்தியம்) MSS 18 H : நூல் 1 : குடும்ப வைத்திய தோழன் நூல் 2 : மானிட ஜீவிய தத்துவம் நூல் 3 : தலைப்பு இல்லை (சுத்தி முறை)
Alternative Title
MSS18A : Mataṉa nūl
MSS18B :
Text 1 : Malayāḷa Aṉupōka Mantiram.
Text 2 : Taṉvantri Makāṉ Malayāḷa Mantiram
MSS18C : Viṣakkaṭi Vaittiyam
MSS18D :
Text 1 : Āti muṟai
Text 2 : Snāṉam Ceyyum Vakai
Text 3 : Kuḻantai Vaittiyam
MSS18E :
Text 1 : Kaimuṟai Aṉupōkam
Text 2 : Kuḻantai Vaittiyam
MSS18F :
Text 1 : No title (clinical experience)
Text 2 : Mataṉa Kāma Nūl
Text 3 : No Title (medicine)
MSS18G :
Text 1 : Mūlar Muṟai
Text 2 : No title (Mantiram)
MSS18H :
Text 1 : Kuṭumpa Vaittiya Tōḻaṉ.
Text 2 : Māṉiṭa Jīviya Tattuvam
Text 3 : No title (purification method)
Author
Anonymous
Caṅkarācāriyar
Āṟumukakōṉ patippu
Content Type
Manuscript
Text
Date of Original Material
MSS18A : 18th century MSS18B : 19th century MSS18C : 18th or 19th century MSS18D : End of 18th and beginning of 19th century MSS18E : Text 1 :6th of march on 1828; text 2 and 3 : End of 19th century MSS18F : End of 19th century MSS18G : 19th or 20th century MSS18H : Beginning of 20th century MSS18I End of the 19th century beginning of the 20th century.
Era
18/20th century CE
Language
Language Details
Tamil all texts are in prose, only MSS18H text 2 is in verses and prose.
Script
Description
The manuscript, containing 276 leaves, is composed of 9 parts, each of them comprising between 1 to 5 texts. The 9 parts are identified : MSS18A to MSS18I. This manuscript deals mostly with medical subjects; philosophy, mantiram and literature are approached in a few texts.
The palm leaves, which were extremely mixed, have been reordered. They are variably affected by rodents and larvae, some being extremely damaged. There are 5 disparate leaves which have been placed at the end of the manuscripts.
MSS18A- The text is an abridged version in Tamil of the Sanskrit text Kāmasāstra. It contains 32 palm leaves and is incomplete. The text is a copy of a manuscript which was printed and published in 18th century by Āṟumuka Kōṉ. The last two leaves list the various published versions of the Kāmasāstra.
The text mentions that Kāmaṉ is worshipped as the god of sex by Hindus and that the ṟṣī Vātcāyaṉar wrote the Kāmasāstra (treatise of love) in which he exposed the importance of sexual intercourse between men and women. It describes the female genitalia (peṇkaḷiṉ amirta nilai), the types of males and females (āṇ, peṇkaḷiṉ vakaikaḷ). The four types of females, patmiṉi, caṅkiṉi, citiṉi and attiṉi, are described according to their characters, physical appearance, style of walking, intelligence, quality of odour emanating from them, and classified as utamam (good), matimam (no good no bad), atamam (bad) and atamātamam (very bad) (hierarchy of classification based on their characteristic features mentioned above as perfect, normal and poor) The types of males are classified in the same manner. The sexual intercourses have to be practised between partners belonging to the same classification in order to optimise the pleasure. The appropriate time and place for sexual intercourse, as well as gestures and postures before, during and after and intercourse are detailed.
-
MSS18B- The part is composed of two incomplete texts which deal with mantiram. Text 1- The text, containing 41 palm leaves, concerns the Mantira Cāstira, a subdivision of Sanskrit literature, comprising mantiram, yantiram and tantiram. The text explains how to worship by chanting mantiram specific to Kaṇapati (Ganeṣa), Lakṣmi, Naracimmaṉ (Narasimha), Cupramaṇiyam (Subramanya), Kāḷi and Patrakāḷi (Bhadrakali) and deities such as, Caṇṭikar, Kuṭṭiccātāṉ, Yaṭciṉi and Karṇa Yaṭciṉi. The text explains that the individuals, who have attained citti (state of high knowledge, of perfection) through this form of worship, may use their power to perform good and bad deeds. The good deeds are illustrated as to reunite husband and wife by finding a compromise to their quarrels, to compensate loss in business and to earn huge amount of money, to ward off evil power from the body, and to turn up things or animal which were stolen. The examples of bad deeds which are provided are to mesmerize women, to make enemies to run out from their place, to burn enemies’ house, in desire of fame or huge amount of money.
Text 2- The text, composed of 15 palm leaves, describes various mantiram used to attract the attention of the goddess Malayāḷa Pakavati; to mesmerise (vaciyam) the world (jaka), the three world (tirilōka), the god Nīlakaṇṭa, women and animals; to ward off evil spirits from the body (pēy oṭṭa) and those who affect children (piḷḷaikaḷ tōṣam); to win legal cases (vaḻakku jeyamāka); to make a women pregnant (kaṟppam tarikka); to treat poisonous bites of snakes (pāmpu) and scorpions (tēḷ) and to heal carbuncle (piḷavai karaiya); to beautify the face of a person; to avoid a new knife to rusting (putu katti turupiṭikkātiruka); and to dye clothes (tuṇikaḷukku cāyamiṭa). The text describes a method to prepare a collyrium (añcaṉam) use in magic. It informs also on the way to make yantiram by providing examples of pictures and letters (bījākṣaram) inscribed in yantiram.
Four leaves, dealing with mantiram, have been added at the end this part, MSS18B
MSS18C- The text, composed of 15 palm leaves, is complete. It deals with animals and insects responsible of poisoning and health issues. The category of snakes is developed by describing their sloughing (caṭṭai uri), their system of reproduction (avaṉṉiṉ uṟpatti), the period of laying eggs (muṭṭaiyiṭum kālam) and their number and the smell (ataṉ vācaṉai). The text lists the types of venomous snakes : cārai pāmpu, cevi pāmpu, puṭaiyāṉ pāmpu, kūlai pāmpu and puṭaiyām pāmpu. It describes how to identify the venom (viṣa pariṭcai), and how to detect the symptoms of an individual bit by a snake and to evaluate his/her chance to be cured and provides some medicines. It mentions the predators of snakes : a red variety of dog (cennāy), peacock (mayil), hen (kōḻi), mongoose (kīri), bear (karaṭi), pig (paṉṟi), vulture (karuṭan), and a red variety of bird looking like the vulture (cempōttu), crocodile (mutalai), owl (āntai) and barn owl (kūkai) and deer (māṉ). The other categories of animals and insects that the text details for their venom or bites are : dog (nāy) and wolf (nari); rat; lizard (vīṭṭu palli), garden lizard (oṇāṉ) and common skink (araṉai); a red variety of leech (cevvaṭṭai), two species of millipede (cītamaṇṭali, rattamaṇṭali), of scorpion (tēḷ, naṭṭuvākkāḷi) and of centipedes (pūrāṉ and ceñcaṭā); frogs (tavaḷai); fly (ī); honey bee (tēṉī); wild variety of wasp (kāṭṭu kuḷavi), of mosquito (kāṭṭu kocu) and of red ant (kāṭṭu ciṟu eṟumpu); spider (cilanti); and bed bug ( mūṭṭai pūci).
MSS18D- The part is composed of three texts which concern medicine and care.
Text 1- The text, composed of 7 leaves numbered from 1 to 7, is complete. It describes modern as well as siddha methods for treating some diseases for which it provides the clinical features : common cold (jalatōṣam); sore throat (toṇṭai kaṭṭu); bronchial asthma (cuvāca kuṟai nōy); wheezing (iḷaippai); tuberculosis with blood (ratta kācam); epistasis (mūkkil rattam varutal), fever (curam) and exanthematous fever (vaicūri), malaria (written in English); male veneral disease (āṇ mēka veṭṭai) and vaginal diseases (yōṉi nōy); and tumours (kiranti). The text presents the formulation to prepare Tāḷicapattiri curaṇam and Pūnāka paṟpam. It describes the method to prepare some medicinal acids.
Text 2- The text, containing 3 palm leaves, is incomplete. It describes, according to the health conditions, the methods of taking bath such as using oil or massage, washing partly the body, using a seat or washing with a sponge; the technique of bath for pregnant women is also indicates. The text additionally presents some physical and breathing exercises.
Text 3- The text, containing 6 palm leaves, is incomplete. It is a compilation of disparate leaves concerning pediatric diseases which are described with their treatment. The child’s diseases which are mentioned are : whooping cough (kakkuvāṉ); indigestion (māntam), fits (kaṇai), fever (curam), diseases caused by kapa imbalance; oliguria (ciṟunīr kaṭṭu); and ceṅkiranti and karuṅkiranti, two diseases not identified. The text describes some diseases which may occur during pregnancy (kaṟppa kāla piracava kaṇitam).
MSS18E- The part is composed of two texts, incomplete, which concern medicine.
Text 1- The text, composed of 13 palm leaves, is a compilation of texts copied by a siddha practitioner who lived at Suchindram (village located to 5km East from Nagerkovil reputed for its Thanumalayan temple). The set of texts lists diseases and the medicines to treat them, and provides some information on the modern methods of treatment.
Text 2- The text is composed of 19 palm leaves numbered from 2 to 19. The name of the text is Kuḻantai Vaittiyam, child’s diseases. The text describes pediatric diseases which occur from delivery and provides formulation of medicines and adjuvant for treating them. It contains information on both modern and siddha method of treatment. It also defines some medicines for adults. Interestingly, the name of diseases or ingredients is sometimes mentioned in English, such as, for example, cirrhosis of liver for apāṇṭa rōkam, ether or potassium iodide.
MSS18F- The part is composed of three texts, incomplete, whose two (1st and 3rd) are related to medicine.
Text 1- The text is a compilation of 9 disparate palm leaves. It provides information on diseases and treatment collected orally from six practitioners (vaittiyar) whose the name of five is mentioned in the text : V.S. Vāriyār; Māṇikkam Piḷḷai (from Pūntoṭṭam, Malabar); Palāri Paḻaṉi pūsāri; Ammāpaṭṭiṇam Kantacāmi and Mārikkuppam Lakṣmi Ammāḷ. The date of the creation of the text given in the text is 15th July of the year 34.
Text 2- The text, composed of 8 palm leaves, is incomplete. The 1st leaf informs that the text in Sanskrit on the Kāmasāstra written by the Ṛṣi Kokkōkar was translated in Tamil by Cankarāccāriyār (Sankaracharya). This leaf is written in verse while the others are in prose style. The text, inscribed in the leaves which are very disparate, describes the categories of women (see the MSS18A).
Text 3- The text contains 2 leaves. The first leaf explains the precautions to be taken in order to prevent cough (irumal), wheezing (īḷai), and diseases resulting from kapa imbalance for which clinical features are described. The second leaf concerns mantiram.
MSS18G- The part is composed of three texts dealing with medicine, rituals and mantiram.
Text 1- The text, incomplete, contains 15 palm leaves numbered from 2 to 16. It describes the appropriate method of worshipping gods (upācaṉai muṟai), the mantiram chanted to specific gods (mūla mantiram) and the food items prepared to the god (nivētaṉam). On the second hand, it presents the clinical features and treatment of the following diseases and troubles : types of urinary tract infections (mēkavāyu and vayira mēkam), of venereal diseases (veḷḷaiveṭṭai, tanti mēkam, piramiya mēkam and mēka cūṭu), and body heat (kāṅkai).
Text 2- The text, composed of 7 palm leaves, is complete. This text echoes the text 1 as it describes the method of worshipping god (tēyva vaḻipāṭu), the mantiram specific to each god (atarkāṉa mūla mantiram), and notably that “om, ciṅk, kiṅk, caṅk, caṅk,cāmpavi putra, namaha, vā, vā, cuvākā” which has to be chanted 1008 times, in sitting position in front of the northern direction. 102 types of mantiram are listed. The text presents also some food items offered to gods (nivētaṉam), notably raw sugar (vellam) and raw rice (paccārici).
Text 3- The text, incomplete, is composed of 2 leaves related to diseases. Those which are exposed in the 1st leaf are : heart attack (māraṭaippu); dysmenorrhoea (cūtaka vāyu), and kuṇṭala vāyu (not identified). The second leaf concerns a medicine recommended to treat eight types of gastric ulcer (aṭṭa kuṉmam). The price and name and address of the place where this medicine is sold, is provided.
MSS18H- The part is composed of three texts dealing with medicine and physiology.
Text 1- The text, constituted of 26 palm leaves, is incomplete. It describes the clinical features and treatment of diseases. The studied diseases are classified by Tamil alphabetical order. The remedies, which are presented, are very simple.
Text 2- The text, containing 6 palm leaves, is incomplete. It deals with the 96 physiological basic concepts in siddha tradition, which are divided into three sets. Only the first set which is presented in the text. It describes the five elements (pūta tattuvam), the five motor organs (kaṉmayentriyam), the five sense organs (poṟikaḷ), the five senses (pulaṉkaḷ), the five sensory perceptions (ñana intiriyam), the four mental faculty (antakaraṇam), and intelligence (arivu).
Text 3– The text, composed of 3 palm leaves, is complete. It presents the process of purification of metals, minerals and vegetable kingdom : zinc (nākam), iron (irumpu), magnet (kāntam), lead (vaṅkam and karuvaṅkam), and mercury (racam); cinnabar (liṅkam), mercuric chloride (vīram), mercurous chloride (pūram), lead monoxide (mirutārciṅki), arsenic pentasulphide (kauri pāṣāṇam), arsenic disulphide (maṉōcilai), arsenic trisulphide (tāḷakam), asbestos (kalnār), gypsum (cilācattu), borax (cīṉākkāram), potash alum (paṭikāram), alum (veṅkāram), copper sulphate (turucu), and 94 types of poisons (94 vakai pāṣāṇam); and seeds of croton tiglium (nervālam), of semicarpus anacardium (cēṅkoṭṭai) and root of withania somnifera (amukkarā vēr).
MSS18I- The part is composed of five texts dealing with botany and medicine.
Text 1- The text, containing 4 leaves, is incomplete. It describes some plants used during the chanting of mantiram, the method to collect them including the root, the process to purify them (cāpa vimōcaṉam) and their other uses. The types of mantiram using plants specified in the text are : vaciyam, tampaṉam, mōkaṉam, akarṣaṇam, pētaṉam, māraṇam, vitvēṣaṉam and uccāṭaṉam.
Text 2- The text, constituted of 26 palm leaves, is incomplete. It deals mostly with plants used their medical properties which are : Phyla nodiflora (poṭutalai), Tinospora cordiflora (cīntil), Gymnema sylvestre (kuṟiñcā), Solanum nigrum (miḷakutakkāḷi), Arachis hypogea (maṇilākkoṭṭai), Moringa oleifera (muruṅkai), Azadiracta indica (vēmpu), Raphanus sativus (muḷḷaṅki), Aegle marmeoles (vilvam), fruit and unripe fruit of Citrus medica (elumiccam paḻam and kāy), Brassica juncea (kaṭuku), Calotropis gigantea (erukkilai), Punica granatum (mātuḷai), Coccinia cordifolia (kōvai ilai), Semicarpus anacardium (cēṅkoṭṭai), Ricinus communis (āmaṇakku), Acacia nilotica (karuvēlam), Centella asiatica (vallārai), Croton toglium (nērvāḷam), Cadaba fruticosa (viḻuti), Abelmoschus esculentus (veṇṭaikkāy), Musa paradisica (vāḻaittaṇṭu), seeds and leaves of Strychnos nux-vomica (eṭṭi ilai and koṭṭai), Andrographis paniculata (nilavēmpu), Abies spectabilis (tāḷicapattiri), Glycyrrhiza glabra (atimaturam), Phyllanthus emblica (arunelli), Ocimum sanctum (tuḷaci), Eleusine coracana (kēḻvaraku), Sesamum indicum (eḷḷu), Curcuma longa (mañcaḷ) and Piper nigrum (miḷaku). The text specifies how to use a few plants. It mentions also some ingredients with therapeutic value : salt and its types, the three emblematic salts (muppu), mica (appirakam) and arsenic pentasulphide (aritāram), as well as cow and buffalo dung (pacu and erumai cāṇam) and cow milk.
Text 3- The text, composed of 1 palm leaf, lists in Tamil alphabetical order plants used in Siddha medicine. The leaf which composed the text deals concerns products beginning by ‘tiri’ (three) :
Three pungents (Tirikaṭuku) : Zingiber officinale (cukku), Piper nigrum (miḷaku) or Cuminum cymium (cīrakam) and Piper longum (tippili)
Three myrobalans (Tiripalai) : Terminalia chebula (kaṭukkāy), Phyllanthus emblica (nellikkāy), Terminalia bellerica (tāṉrikkāy)
Three aromatics (Tirikantam) : Santalum album (cantaṉam), Aquilaria agallocha (akiṟkaṭṭai) and Cedros deodara (tēvatāru)
Three fragrances (Tiricukantam) : Myristica fragrans (cātikkāy), Myristica fragrans (cātipattiri) and Syzygium aromaticum (lavaṅkam).
Text 4– The text, comprising 5 palm leaves, is complete. It describes the preparation of distillates (tirāvakam) and specifies the diseases to which they are recommended. The types of distillates mentioned are produced from plants : Zingiber officinale (iñci), Allium sativum (uḷḷi or veḷḷaipūṇṭu), Trachyspermum ammi (omam), three myrobolans (tiripalāti tirāvakam), Piper nigrum (miḷaku tirāvakam), Piper longum (tippili), Semicarpus anacardium seeds (cēṅkoṭṭai), three pungents (tirikaṭu); from salts : fullers earth (vālai), salt crystals (kaluppu), salt petre (veṭiyuppu), combination of salt petre and borax (veṭicīṉa); from and other ingredients : coconut toddy drink (teṉṉaṅkaḷ tirāvakam), vinegar (kāṭi tirāvakam), camphor (cūṭaṉ tirāvakam) and wax (meḻuku). The diseases which are mentioned for which distillates are prescribed are : ear disease (cevi nōy), colic pain due to vāta imbalance (cūlaivāta), diabetes (nīriḻivu) and oligurea (nīrccuru).
Text 5- The subject of the text, comprising 1 palm leaf, is very different from those developed in this manuscript. It concerns the preparation of various inks which are : black colour ink (acal karuppu ink), permanent black colour ink (aḻiyāta karuppu ink), superior quality ink (uyarnta ink), red ink (cikappu ink) and several sorts of magical inks (māya ink). The text presents also some characteristics of the thermometer (uṣṇamāṇi).
Description in Tamil
276 ஓலைகளை உடைய இந்நூலில் 9 பாகங்கள் உள்ளன, அவற்றில் 1 முதல் 5 நூல்கள் வரை உள்ளன.அந்த 9 பாகங்களும் MSS 18A முதல் MSS18I வரை என குறிப்பிடப்பட்டுள்ளன.இந்த சுவடி பெரிதும் மருத்தவ தொடர்பான தகவல்களை பற்றியே கூறுகின்றன.சிறிதளவு தத்துவம், மந்திரம், இலக்கியம் பற்றியும் நூல்கள் உள்ளன.
மிகவும் முறையற்ற நிலையில் இருந்த ஓலைகள் வரிசையாக அடுக்க பட்டுள்ளன.அவை எலிகள், பூச்சிகளால் பாதிக்கப்பட்டு உள்ளன, சில ஓலைகள் மிகவும் சேதம் அடைந்து உள்ளன.
MSS 18A- காமசாஸ்திரம் என்னும் சமஸ்கிருத நூலின் தமிழாக்கமாகும் இந்நூல்.32 ஓலைகளை உடைய இந்நூல் ஓர் முழுமை இல்லா நூலாகும் ஆறுமுக கோன் என்பவரால் 18ஆம் நூற்றாண்டில் அச்சிடப்பட்டு வெளியான நூலின் பிரதியாகும் இந்நூல்.காமசாஸ்ரா என்னும் இந்நூலின் பல்வேறு வெளியீடுகள் பற்றிய தகவல்கள் கடைசி இரண்டு ஓலையில் உள்ளது
காமன் என்பவன் காமத்திற்கு தெய்வமாக இந்துக்கள் வழிபடுகிறார்கள்.ரிஷி வாத்ஸ்யாயனர் இயற்றிய காமசாஸ்திரம் என்னும் இந்நூலில் அவர் ஆண், பெண் சேர்க்கையின் முக்கியத்துவம் பற்றி விளக்குகிறார்.அவர் பெண்களின் அமிர்த நிலை, ஆண், பெண்களின் வகைகள் பற்றி விளக்குகிறார்.பெண்களின் வகைகளை பத்மினி, சங்கினி, சித்தினி மற்றும் அத்தினி என்று நான்காக பெயரிட்டு, பிரித்து அந்த பெண்களின் குணம், உருவ அமைப்பு, நடை, அறிவு, அவர்களிடம் வீசும் மணம் இவற்றை கொண்டு அவர்களை உத்தமம், மத்திமம், அதமம் மற்றும் அதமாதமம் என்று சாதிகளாக பிரித்து கூறுகிறார்.இதே போல் ஆண்களையும் பிரித்து விளக்கி, உத்தமசாதி பெண் உத்தம சாதி ஆணுடன் கலவி கொண்டால் இன்பம் என்றும், வேறு சாதிகளால் மாற்றம் ஏற்படில் கலவியில் பூரணம் அடைய முடியாது என்றும் கூறுகிறார்.மேலும் கலவிக்குரிய காலம், இடம், கலவிக்கு முன், கலவிக்கு பின், கலவியின் போது நடைபெறு செயல்கள், கரணங்கள் ஆகியவைக் குறித்து விரிவாக கூறுகிறார்.
MSS18B- இந்த பாகத்தில் மந்திரத்தை பற்றி கூறும் இரண்டு முழுமை இல்லா நூல்கள் உள்ளன
நூல் 1- 41 ஓலைகளை உடைய இந்நூல் சமஸ்கிருத இலக்கியத்தின் ஒரு பகுதியான மந்திர சாஸ்திரத்தை பற்றி விளக்குகிறது.மந்திர சாஸ்திரத்தில் மந்திரம், தந்திரம் மற்றும் யந்திரம் என்ற மூன்று உட்பிரிவுகள் உள்ளன.இந்நூல் தெய்வங்களை வழிபடும் முறைகளை விளக்குகிறது.முறையே கணபதி, லக்ஷ்மி, நரசிம்மன், சுப்ரமணியர், காளி மற்றும் பத்ரகாளி, போன்ற தெய்வ வழிபாடு முறையும், மேலும் சண்டிகர், குட்டிச்சாத்தான், யட்சினி, கர்ண யட்சினி போன்ற சிறு தெய்வங்களின் வழிபாட்டு முறையையும் விளக்குகிறது.இம்முறையில் தெய்வத்தை வழிபட்டு அருள் பெற்றவர்கள் சித்தி அடைந்தவர்களாக கருதப்படுவர்.அவர்கள் தங்களின் சக்தியை பயன்படுத்தி நல்ல மற்றும் தீய வினைகளை செய்ய முடியும்.நல்வினை என்பது பிரிந்த தம்பதிகளை சேர்த்து வைத்தல், வியாபாரத்தில் நஷ்டமானவருக்கு மந்திரம் மூலம் செல்வத்தை பெருக்குதல், பேய் ஓட்டுதல், திருட்டு போன பொருள், விலங்குகளை கண்டுபிடித்தல் போன்ற செயல்கள் ஆகும்.தீவினையானது பொருள் மற்றும் புகழ் ஆசையால் பெண்களை வசிய படுத்துதல், எதிரியை ஊரைவிட்டே ஓட செய்தல், எதிரியின் வீட்டை எரித்தல் போன்ற துர்காரியங்களை செய்வதாகும்.
நூல் 2- 15 ஓலைகளை உடைய இந்நூல் மலையாள பகவதி என்ற தேவதையின் வசிய தியான மந்திரங்களை விளக்குகிறது; மேலும் ஜக வசியம்; திரிலோக வசியம்; நீலகண்ட வசியம்; பெண் வசியம், மிருக வசியம்; பேய் ஓட்ட, பிள்ளைகள் தோஷம்; வழக்கு ஜெயமாக; கர்ப்பம் தரிக்க; பாம்பு மற்றும் தேள்கடி; குணமாக; பிளவை கரைய; முக வசியமுண்டாக; புது கத்தி துருபிடிக்காதிருக்க; மற்றும் துணிகளுக்கு சாயமிட மந்திரங்களும் விளக்கப்பட்டுள்ளன.இந்நூல் மந்திரத்தில் பயன்படும் அஞ்சன மை செய்முறையையும் விளக்குகிறது.மேலும் யந்திரங்கள் செய்யும் முறை -அவற்றின் படங்கள் அதில் எழுதும் பீஜாக்ஷரங்களும் கூறப்பட்டுள்ளன
மந்திரத்தை பற்றி கூறும் நான்கு ஓலைகள் இந்த பாகத்தின் முடிவில் சேர்க்கப்பட்டுள்ளது
MSS18 C- 15 ஓலைகளை உடைய இந்நூல் ஒரு முழுமையான நூலாகும்.இந்நூல் விலங்குகள் மற்றும் பூச்சு கடிகளால் மனிதருக்கு ஏற்படும் விஷ நிலைகள் பற்றி விளக்குகிறது.இந்நூலில் பாம்புகளின் வகைகள் சட்டை உரிக்கும் பாம்புகள், அவற்றின் உற்பத்தி, முட்டையிடும் காலம், மற்றும் அதன் வாசனை ஆகியவற்றை கொண்டு கூறப்பட்டுள்ளது.இந்நூலில் கூறப்பட்டுள்ள விஷ பாம்புகள் : சாரை பாம்பு, செவி பாம்பு, புடையான் பாம்பு, கூலைப்பாம்பு மற்றும் புடையாம் பாம்பு ஆகும்.இந்நூலில் விஷ பரிட்சை, பாம்பு கடித்தவுடன் கடிபட்ட மனிதனிடம் ஏற்படுகின்ற குறிகள், மனிதனின் உயிர் நிலை, பாம்பு கடிக்கு சில மருந்துகளும் விளக்கப்பட்டுள்ளன.பாம்பின் சத்ருக்களான செந்நாய், மயில், கோழி, கீரி, கரடி, பன்றி, கருடன், செம்போத்து, முதலை, ஆந்தை, கூகை மற்றும் மான் போன்ற உயிரினங்களை பற்றி கூறுகிறது.மேலும், இந்நூல் சில விஷ விலங்கு மற்றும் பூச்சிக்கடி பற்றி விளக்குகிறது.அவை : நாய், நரி, வீட்டுப்பல்லி, ஓணான், அரணை, செவ்வட்டை, சீதமண்டலி, ரத்தமண்டலி, தேள், நட்டுவாக்களி, பூரான், செசடா, தவளை, ஈ, தேனீ, கட்டு குளவி, காட்டு கொசு, காட்டு சிறு எறும்பு, சிலந்தி மற்றும் மூட்டை பூச்சு ஆகும்
MSS 18 D- இந்த பாகத்தில் மருத்துவம் மற்றும் பாதுகாப்பு பற்றி கூறும் மூன்று நூல்கள் உள்ளன
நூல் 1- இந்நூல் 1 முதல் 7 வரை எண் கொண்ட 7 ஓலைகளை உடைய ஒரு முழுமையான நூலாகும்.இந்நூல் ஆங்கில மற்றும் சித்த மருத்துவ முறைப்படி நோய் தீர்க்கும் முறையை விளக்குகிறது.இந்நூலில் கூறப்பட்டுள்ள சில நோய்களின் குணங்கள் : ஜலதோஷம், தொண்டை கட்டு, சுவாச குறை நோய், இளைப்பை, ரத்த காசம், மூக்கில் ரத்தம் வருதல், சுரம், வைசூரி, மலேரியா, ஆண் மேக வெட்டை, யோனி நோய் மற்றும் கிரந்தி ஆகும்.தாளிசபத்திரி சூரணம் மற்றும் பூநாக பற்பம் போன்ற மருந்துகளின் செய்முறைகளை விளக்குகிறது.சில வகை திராவகம் செய்முறை பற்றிய குறிப்புகளும் உள்ளன
நூல் 2- 3 ஓலைகளை உடைய இந்நூல் முழுமை இல்லா நூலாகும்.இந்நூல் அவரவர் உடல்நிலையை பொறுத்து ஸ்நானம் செய்யும் முறையை விளக்குகிறது.அவை தேக அப்பியாசம், மேல் பிடித்தல், எண்ணெய் ஸ்நானம், அங்க ஸ்நானம், ஆயன ஸ்நானம் மற்றும் கெர்ப மாது ஸ்நான முறை.மேலும், சில உடல் பயிற்சி மற்றும் மூச்சு பயிற்சி பற்றியும் கூறுகிறது
நூல் 3- 6 ஓலைகளை உடைய இந்நூல் ஒரு முழுமை இல்லா நூலாகும்.இந்நூல் குழந்தை நோய் மற்றும் அதற்கான மருத்துவம் பற்றி கூறும் உதிரி ஏடுகளின் தொகுப்பாகும்.இந்நூலில் கூறப்பட்டுள்ள குழந்தை நோய்கள் : கக்குவான்; மாந்தம்; கணை; சுரம்; கபம்; சிறுநீர் கட்டு, செங்கிரந்தி, கருங்கிரந்தி, மேலும் இரண்டு நோய்கள் உள்ளன.கர்ப்ப கால பிரசவ கணிதம் பற்றியும் கூறுகிறது
MSS 18 E- இந்த பாகத்தில் மருத்துவத்தை பற்றி கூறும் முழுமை இல்லா இரண்டு நூல்கள் உள்ளன
நூல் 1- சுசீந்திரம் (சுசீந்திரம் என்னும் கிராமம் நாகர்கோவிலில் இருந்து 5 கிலோமீட்டர் கிழக்கே உள்ள ஒரு ஊராகும்) என்னும் கிராமத்தில் வாழ்ந்த வைத்தியர் சேகரித்து வைத்துள்ள நூல் பிரதிகளின் தொகுப்பே 13 ஓலைகளை உடைய இந்நூலாகும்.இந்நூல் நோய்கள் மற்றும் அதற்கான மருந்துகள், மற்றும் சில ஆங்கில மருத்துவ முறை பற்றிய தகவல்களை கூறுகிறது
நூல் 2- 2 முதல் 19 வரை எண் கொண்ட ஓலைகளை உடையது இந்நூல்.இது குழந்தை வைத்தியம் என்னும் நூலாகும்.இந்நூல் குழந்தை பிறந்தது முதல் ஏற்படும் நோய்கள், அந்நோய்களை குணமாக்கும் மருந்து செய்முறைகள் மற்றும் அதற்கான அனுபானமும் விளக்கப்பட்டுள்ளது.இந்நூல் ஆங்கில மற்றும் சித்த மருத்துவ முறை இரண்டை பற்றியும் விளக்குகிறது.பெரியவர்களுக்கு உண்டாகும் நோய்களுக்கான சில மருந்துகளை பற்றியும் கூறுகிறது.சுவாரஸ்யமாக சில நோய்கள் மற்றும் மருந்துகளின் பெயர்கள் ஆங்கிலத்தில் குறிப்பிட பட்டு உள்ளன, உதாரணமாக அபாண்ட ரோகம் என்பது சிரரோசிஸ் ஆப் லிவர் என்றும், ஈத்தர் அல்லது பொட்டாசியம் அயோடைடு பற்றியும் கூறுகிறது
MSS18 F- இந்த பாகத்தில் முழுமை இல்லா மூன்று நூல்கள் உள்ளன, அவற்றில் இரண்டு (முதல் மற்றும் மூன்றாவது) மருத்துவத்தை பற்றியதாகும்.
நூல் 1- இந்நூல் 9 உதிரி ஏடுகளின் தொகுப்பாகும்.இந்நூல் 6 வைத்தியர்களிடம் இருந்து நோய் மற்றும் அதற்கான மருத்துவம் பற்றி பெறப்பட்ட தகவல்களின் தொகுப்பாகும்.அவற்றில் 5 வைத்தியர்களின் பெயர், விபரம் குறிப்பிட பட்டுள்ளன.அவை : வி எஸ் வாரியார்; பூந்தோட்டத்தில் இருந்து மலபார் மாணிக்கம் பிள்ளை; பலாரி பழனி பூசாரி; அம்மாபட்டிணம் கந்தசாமி; மாரிக்குப்பம் லக்ஷ்மி அம்மாள் ஆவர்.இந்நூல் உருகாக்கப்பட்ட தேதி ஜூலை 15, 34ஆம் வருடம் ஆகும்
நூல் 2- 8 ஓலைகளை உடைய இந்நூல் ஒரு முழுமை இல்லா நூலாகும்.ரிஷி கொக்கோகர் என்பவரால் சமஸ்கிருதத்தில் எழுதப்பட்ட காமசாஸ்த்ரா என்னும் நூலை தமிழில் சங்கராச்சாரியார் என்பவர் மொழிபெயர்த்தார் என்ற குறிப்பு இந்நூலின் முதல் ஓலையில் உள்ளது.முதல் ஓலை மட்டும் விருத்தம் வடிவிலும் மற்ற ஓலைகள் உரைநடை வடிவிலும் எழுதப்பட்டுள்ளன.இந்நூலில் உள்ள ஓலைகள் பெண்களின் வகைகள் பற்றி விளக்குகின்றன (MSS18 A வை காணவும்)
நூல் 3- இந்நூல் இரண்டு ஓலைகளை கொண்டது.முதல் ஒலையானது இருமல் வராமல் தடுக்கவும் வலி, ஈளை மற்றும் கப நோய் போன்ற நோய்களின் குறிகுணம் பற்றி விளக்குகிறது.இரண்டாவது ஓலை மந்திரத்தை பற்றியதாகும்
MSS18 G- இந்த பாகத்தில் மூன்று நூல்கள் உள்ளன, அவை மருத்துவம், சடங்குகள் மற்றும் மந்திரம் பற்றியதாகும்
நூல் 1- 15 இலைகளை கொண்ட இந்நூல் ஒரு முழுமை இல்லா நூலாகும் (2-16).இந்நூல் உபாசனை முறைகள், மூல மந்திரம் மற்றும் நிவேதனம் பற்றி விளக்குகிறது.கீழ்கண்ட நோய்களின் குறிகுணம் மற்றும் மருத்துவம் பற்றியும் கூறுகிறது.அவை : மேகவாயு மற்றும் வயிர மேகம், வெள்ளைவெட்டை, தந்தி மேகம், பிரமியமேகம், மேகசூடு மற்றும் காங்கை ஆகும்
நூல் 2- 7 ஓலைகளை உடைய இந்நூல் ஒரு முழுமையான நூலாகும்.இதுவும் முதல் நூலில் உள்ள தகவல்களையே கூறுகிறது, அவை தெய்வ வழிபாடு, அதற்கான மூல மந்திரம், மற்றும் ஓம், சிங்,கிங்,சங், சங், சாம்பவி புத்ரா நமஹா, வா, வா, சுவாகா என்ற இந்த மந்திரத்தை வடக்கு முகமாக அமர்ந்து 1008 முறை ஜபிக்க வேண்டும்.102 வகையான மந்திரங்கள் இந்நூலில் கூறப்பட்டுள்ளன.நிவேதனத்திற்கான பொருட்கள் வெல்லம் மற்றும் பச்சரிசி பற்றியும் விளக்குகிறது
நூல் 3- 2 ஓலைகளை உடைய இந்நூல் ஒரு முழுமை இல்லா நூலாகும், அவை மருத்துவத்தை பற்றி கூறுகின்றன.முதல் ஓலையில் உள்ள தகவல்கள் : மாரடைப்பு, சூதக வாயு மற்றும் குண்டல வாயு ஆகும்.இரண்டாம் ஓலை அட்ட குன்மத்திற்கான மருந்தை பற்றி கூறுகிறது.அம்மருந்து கிடைக்கும் இடம், முகவரி, விலை போன்ற தகவல்களும் உள்ளன
MSS 18 H- இந்த பாகத்தில் மூன்று நூல்கள் உள்ளன, அவை மருத்துவம் மற்றும் உடல் தத்துவம் பற்றி கூறுகிறது.
நூல் 1- 26 ஓலைகளை உடைய இந்நூல் ஒரு முழுமை இல்லா நூலாகும்.இந்நூல் நோய்களின் குறிகுணம் மற்றும் மருத்துவம் பற்றி விளக்குகிறது.இந்நூல் உள்ள நோய்கள் அகர வரிசைப்படி குறிப்பிட பட்டுள்ளன.மேலும் மருந்துகளும் மிகவும் எளிமையாக உள்ளன
நூல் 2- 6 ஓலைகளை உடைய இந்நூல் ஓர் முழுமை இல்லா நூலாகும்.இது சித்த மருத்துவத்தின் அடிப்படை 96 தத்துவங்களை பற்றி கூறுகிறது.அவை மூன்று பிரிவாக பிரிக்கப்பட்டுள்ளன.முதல் பிரிவு மட்டுமே இந்நூலில் விளக்கப்பட்டுள்ளது.அவை : பூத தத்துவம், கன்மேந்திரியம், பொறிகள், புலன்கள், ஞானேந்திரியம், அந்தகரணம் மற்றும் அறிவு ஆகும்
நூல் 3- 3 ஓலைகளை உடைய இந்நூல் ஒரு முழுமையான நூலாகும்.இந்நூல் தாவர, தாது மற்றும் உலோக சுத்தி முறைகளை விளக்குகின்றன.அவை : நாகம், இரும்பு, காந்தம், வங்கம், கருவங்கம், ரசம், லிங்கம், வீரம், பூரம், மிருதார்சிங்கி, கௌரி பாஷாணம், மனோசிலை, தாளகம், கல்நார், சிலாசத்து, சீனாக்காரம், படிகாரம், வெங்காரம், துருசு, 94 வகை பாஷாணம், நேர்வாளம், சேங்கொட்டை மற்றும் அமுக்கரா வேர்.
MSS 18 I - இந்த பாகத்தில் ஐந்து நூல்கள் உள்ளன, அவை தாவரவியல் மற்றும் மருத்துவம் பற்றி கூறுகிறது.
நூல் 1- 4 ஓலைகளை உடைய இந்நூல் ஒரு முழுமை இல்லா நூலாகும்.இந்நூல் மந்திரங்களில் பயன்படுத்தும் மூலிகைகள், அதை வேருடன் பிடுங்க வேண்டிய முறை, அதன் சாப விமோசனம் அந்த மூலிகையின் பயன் பற்றி கூறுகிறது.இந்நூலில் பயன்படுத்தப்பட்டுள்ள மந்திரங்கள் : வசியம், தம்பனம், மோகனம், ஆகர்ஷணம், பேதனம், மாரணம், வித்வேஷனம் மற்றும் உச்சாடனம்
நூல் 2- 26 ஓலைகளை கொண்ட இந்நூல் ஒரு முழுமை இல்லா நூலாகும்.இந்நூல் பல மூலிகைகளின் மருத்துவ குணம் பற்றி கூறுகின்றன.அவை : பொடுதலை, சீந்தில், குறிஞ்சா, மிளகுதக்காளி, மணிலாக்கொட்டை, முருங்கை, வேம்பு, முள்ளங்கி, வில்வம், எலுமிச்சம் பழம் மற்றும் காய், கடுகு, எருக்கிலை, மாதுளை, கோவை இலை, சேங்கொட்டை, ஆமணக்கு, கருவேலம், வல்லாரை, நேர்வாளம், விழுதி, வெண்டைக்காய், வாழைத்தண்டு, எட்டி இலை, எட்டி கொட்டை, நிலவேம்பு, தாளிசபத்திரி, அதிமதுரம், அருநெல்லி, துளசி, கேழ்வரகு, எள்ளு, மஞ்சள் மற்றும் மிளகு ஆகும்.சில மூலிகைகளின் பயன்பாடு பற்றியும் விளக்குகிறது.சில சரக்குகளின் மருத்துவ குணங்களை பற்றியும் விளக்குகிறது, அவை உப்பு அதன் வகைகள், முப்பு, அப்பிரகம், அரிதாரம், பசு, எருமை சாணம் மற்றும் பசும் பால் ஆகும்
நூல் 3- ஒரு ஓலையை உடைய இந்நூல் அகர வரிசைப்படி சித்த மருத்துவத்தில் பயன்படும் மூலிகையை பற்றி விளக்குகிறது.‘திரி’ என்ற வார்த்தையில் தொடங்கும் பொருட்களை பற்றி கூறும் ஒரு ஓலையை உடையது இந்நூல்
திரிகடுகு : சுக்கு, மிளகு, திப்பிலி அல்லது சீரகம்.
திரிபலை :கடுக்காய், நெல்லிக்காய், தான்றிக்காய்
திரிகந்தம் : சந்தனம், அகிற்கட்டை, தேவதாரு
திரிசுகந்தம் : சாதிக்காய், சாதிபத்திரி, லவங்கம்
நூல் 4- 5 ஓலைகளை உடைய இந்நூல் ஒரு முழுமையான நூலாகும்.இந்நூல் திராவக செய்முறை மற்றும் அவை குணமாக்கும் நோய்கள் பற்றி விளக்குகிறது.கீழ்கண்ட தாவரத்தில் இருந்து திராவகங்கள் செய்யப்படுகின்றன : இஞ்சி, உள்ளி அல்லது வெள்ளைப்பூண்டு, ஓமம், திரிபலாதி திராவகம், மிளகு திராவகம், திப்பிலி, சேங்கொட்டை, திரிகடுகு; உப்புகளில் இருந்து செய்யப்படும் திராவகம் : வழலை, கல்லுப்பு, வெடியுப்பு, வெடிசீனா; வேறுவகை திராவகம் : தென்னங்கள் திராவகம், காடி திராவகம், சூடன் திராவகம் மற்றும் மெழுகு.மேற்கூறிய திராவகங்கள் குணமாக்கும் நோய்கள் : செவி நோய், சூலைவாதம், நீரிழிவு மற்றும் நீர்ச்சுருக்கு ஆகும்
நூல் 5- ஒரு ஓலையை கொண்ட இந்நூலில் உள்ள தகவல் மேற்கூறிய சுவடிகள் அனைத்திலும் மாறுபட்டதாகும்.இந்நூல் இங்குகள் செய்முறை பற்றி விளக்குகிறது.இந்நூலில் கூறப்பட்ட பல வண்ண இங்குகள் : அசல் கருப்பு இங்கு, அழியாத கருப்பு இங்கு, உயர்ந்த இங்கு, சிகப்பு இங்கு, மாய இங்கு.உஷ்ணமாணி பற்றி சில தகவல்களும் உள்ளன
Extent and Format of Original Material
Size of the manuscript : 32.0cm x 4.0cm. The condition of the manuscript is average, the leaves being more and less afected by larvae. Details on the composition of the manuscript are provided in the description.
The manuscript contains 276 palm leaves of 7-17 lines per leaf according the texts, with two wooden board.
System of Arrangement
The palm leaves, which were extremely mixed, have been arranged by the person in charge of the catalogue, into 9 parts composed of 1 to 5 texts.
Collection Name
Contributor
S.P. Anandan (Owner of the original material)
Location of Original Material
S.P. Anandan, Madurai
Custodial History
The manuscript belongs to Mr S.P. Anandan who resides at Madurai. He collected it during his project aiming to document siddha practitioners. This manuscript belonged to A. Palanisamy, a Registered Indian Medicine Practitioner from the village of Thevaram (Tēni district).
Series Name
Manuscripts from Teni District (TE) [S.P. Anandan Collection]
Series Number
Series 1 : Anandan_TE
Level
File
EAP Project Number
EAP 810
Reference
EAP810_Anandan_TE_MSS18
Extent of Digital Material
577 TIFF images; size of the file : 16,8 Gb.
Date Modified
2006-07-12/13
Key
eap810_000288
Reuse
License
Cite as
MSS 18 A : மதன நூல் MSS 18 B : நூல் 1 : மலையாள அனுபோக மந்திரம் நூல் 2 : தன்வந்திரி மகான் மலையாள மந்திரம் MSS 18 C : விஷக்கடி வைத்தியம் MSS 18 D : நூல் 1 : ஆதி முறை நூல் 2 : ஸ்நானம் செய்யும் வகை நூல் 3 : குழந்தை வைத்தியம் MSS 18 E : நூல் 1 : கைமுறை அனுபோகம் நூல் 2 : குழந்தை வைத்தியம் MSS 18 F : நூல் 1 : நிறைய வைத்தியர்களின் வைத்திய அனுபவம் நூல் 2 : மதன காம நூல் நூல் 3 : தலைப்பு இல்லை (வைத்தியம்) MSS 18 G : நூல் 1 : மூலர் முறை நூல் 2 : தலைப்பு இல்லை (மந்திரம்) நூல் 3 : தலைப்பு இல்லை (வைத்தியம்) MSS 18 H : நூல் 1 : குடும்ப வைத்திய தோழன் நூல் 2 : மானிட ஜீவிய தத்துவம் நூல் 3 : தலைப்பு இல்லை (சுத்தி முறை),
in Digital Collections, Institut Français de Pondichéry,
Manuscripts of Siddha Medicine,
consulted on September, 10th 2025, https://ifp.inist.fr/s/manuscripts/item/369608